Share

பாலக் கீரை பக்கோடா – Spinach Pakora Recipe in Tamil

[ad_1]

பாலக் கீரை பக்கோடா மாலை நேரங்களில் டீயுடன் சுவைக்கக்கூடிய ஒரு அட்டகாசமான மாலை நேர சிற்றுண்டி. இவை பண்டிகை மற்றும் பிறந்தநாள் விழாக்களின் போது குறைந்த நேரத்தில் செய்து முடிக்க கச்சிதமானது.

பக்கோடா நம்மில் பல பேருக்கு பிடித்தமான ஒரு உணவாகத் தான் இருக்கும். நாம் பொதுவாக வெங்காய பக்கோடா மற்றும் காலிஃபிளவர் பக்கோடா செய்து சுவைத்து இருப்போம். ஆனால் இன்று நாம் இங்கு காண இருப்பது வித்தியாசமான மற்றும் ஒரு சத்தான பாலக் கீரை பக்கோடா. என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான பாலக் கீரை பக்கோடாவின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Spinach Pakoda

Spinach Pakoda

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்: 

நம்மில் பல பேர் சாயங்கால வேளையில் சூடான டீ அல்லது காபியுடன் பக்கோடாவை சுவைப்பது வழக்கம் தான். நாம் வழக்கமாக செய்து சுவைக்கும் பக்கோடாக்களுக்கு மாற்றாக சத்தான பக்கோடா ஒன்று இருந்தால் நமக்கென்ன கசக்கவா செய்யும்? பால கீரையின் சத்துக்களோடு, பக்கோடாவின் மொறு மொறுப்பு தன்மையுடன் இருக்கும் இந்த பாலக் கீரை பக்கோடாவை கட்டாயம் உங்கள் வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்பார்கள். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்: 

நாம் இது சேர்க்கும் பாலக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சி நன்கு அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓம விதைகள், மற்றும் பெருங்காய தூளுடன் நன்கு ஒன்றோடு ஒன்று சேர்ந்து பொரிந்து நன்கு மொறு மொறுப்பாக அட்டகாசமாக இருக்கும்.

சில குறிப்புகள்: 

பக்கோடா மாவு கலவையில் ஒரு கையளவு தண்ணீர் தெளிப்பதால் மாவு அதிகம் பிரிந்து செல்லாமல் நன்கு ஒட்டி வர உதவும்.

இவ் உணவின் வரலாறு:

பக்கோடா இந்திய துணை கண்டத்தில் உருவான ஒரு உணவாக வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. பக்கோடா என்கின்ற வார்த்தை ‘Pakvavata’ என்கின்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வருகிறது. ‘Pakva’ என்றால் சமைத்தது ‘Vata’ என்றால் சிறு துண்டுகள் என்று பொருளாகும். பக்கோடாவை போன்ற ஒரு உணவு சங்க மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பக்கோடாவிற்கான முழு வடிவம் 1130 CE யில் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்காலத்தைச் சேர்ந்த Manasollasa என்கிற சமையல் புத்தகத்தில் காய்கறி மற்றும் கடலை மாவுடன் சேர்ந்து செய்யப்படும் ஒரு உணவுக்கு ‘Parika’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள். 1025 CE யை சேர்ந்த Lokopakara என்கிற சமையல் புத்தகத்தில் கடலை மாவு கலவையை மீன் போல வடிவமாக்கி அதை கடுகு எண்ணெய்யில் பொரித்தெடுக்கப்படும் ஒரு உணவு குறிப்பிடப்பட்டுள்ளது.

காலப்போக்கில் பக்கோடா வெவ்வேறு வடிவம் எடுத்து தற்போது மக்களால் பலவிதமாக செய்து சுவைக்கப்பட்டு கொண்டு வருகிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

பாலக் கீரை பக்கோடா செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 5 லிருந்து 10 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.

பாலக் கீரை பக்கோடாவை முழுமையாக சுமார் 30 நிமிடத்தில் இருந்து 35 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

பாலக் கீரை பக்கோடாவை பொறித்து எடுத்தவுடன் ஒரு ஏர் டைட் கண்டைனரில் போட்டு வைத்து விட்டால் அதை சுமார் நான்கில் இருந்து ஐந்து நாட்கள் வரை வைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

பாலக் கீரை பக்கோடா செய்ய நாம் பயன்படுத்து பாலக் கீரையில் இரும்பு சத்து, புரத சத்து, நார் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின் C நிறைந்து இருக்கிறது. இவை கண் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க, மற்றும் புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.

இதில் நாம் சேர்க்கும் அரிசி மாவில் புரத சத்து, இரும்பு சத்து பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின் B6 இருக்கிறது. இவை உடம்பில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க மற்றும் ஜீரண சக்தியை கூட்ட உதவுகிறது.

நாம் இதில் சேர்க்கும் கடலை மாவில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின் B6 உள்ளது. இவை இருதயம் மற்றும் எலும்பை ஆரோக்கியமாக வைக்க, மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் ஓம விதைகளில் பிரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, கால்சியம், மற்றும் பொட்டாசியம் உள்ளது. இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, ஜீரண சக்தியை கூட்ட, மற்றும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் மஞ்சள் தூளில் நார் சத்து, புரத சத்து,  இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, சிங்க், விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கண், மற்றும் கிட்னி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

 

Spinach Pakoda