Share

பன்னீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை – Paneer Vegetable Stir Fry Recipe in Tamil

[ad_1]

பன்னீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை ஒரு வித்தியாசமான மற்றும் அற்புதமான மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகும். பண்டிகை மற்றும் பிறந்தநாள் விழாக்களின் போது குறைந்த நேரத்தில் செய்து முடிக்க கச்சிதமானது.

நாம் அனைவருக்கும் வெறும் சுவையான உணவாக மட்டுமின்றி நல்ல சத்தான உணவாகவும் உண்ண வேண்டும் என்றுதான் எண்ணம் இருக்கும். அதுமட்டுமின்றி நம்மில் பல பேர் இன்று எடையை குறைக்க வேண்டும் என்று டயட் எல்லாம் இருந்து கொண்டிருக்கிறோம். அந்த டயட்டுக்கு ஏற்றவாறு நல்ல சத்தான மற்றும் நிறைவான உணவாக நாம் இன்று இங்கு காண இருக்கும் பன்னீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை நிச்சயம் இருக்கும். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான பன்னீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

பன்னீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை – Paneer Vegetable Stir Fry Recipe in Tamil
Paneer Vegetable Stir Fry / பன்னீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பெரும்பாலானோர் ஹெல்த் கான்ஷியஸ் ஆக மாறி கொண்டு வருகிறோம். நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். நீங்கள் அவ்வாறு இருப்பவரானால் இந்த பன்னீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை உங்கள் சத்தான உணவுகள் பட்டியலில் கட்டாயம் இடம் பிடித்திருக்க வேண்டும். இன்னும் இவை இடம் பிடிக்கவில்லை என்றால் இன்று முதல் இதை சேர்த்துக் கொள்ளுங்கள். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

நாம் இந்த பன்னீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரையில் சேர்க்கும் மூன்று விதமான குடை மிளகாய்களை, ப்ரோக்கோலி, கேரட், வெங்காயம், மற்றும் பன்னீர் நாம் சேர்க்கும் மிளகு தூள், சில்லி ஃப்ளெக்ஸ், மற்றும் சோயா சாஸ் போன்ற சுவையூட்டிகளுடன் சேர்ந்து நன்கு வெந்து அட்டகாசமான சுவையை கொடுக்கும். அதுமட்டுமின்றி நாம் இதில் சேர்க்கும் பெரும்பாலான பொருட்களில் சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன.

சில குறிப்புகள்:

பன்னீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரையில் சேர்க்கும் பன்னீர், ப்ரோக்கோலி, வெங்காயம், கேரட், மற்றும் குடை மிளகாய்களை சற்று பெரிய துண்டுகளாக ஒரே சைஸில் நறுக்கினால் அவை ஒன்று போல் வேகுவதற்கு எளிதாக மட்டும் இன்றி உண்பதற்கும் நன்றாக இருக்கும்.

இதில் நாம் ஒரே நிற குடை மிளகாய் யையும் சேர்க்கலாம். ஆனால் மூன்று நிற குடை மிளகாய்களை சேர்க்கும் பொழுது அது வெவ்வேறு சுவையை இந்த உணவிற்கு கொண்டுவரும்.

இவ் உணவின் வரலாறு:

ஸ்டிர் ஃப்ரை சைனாவில் உள்ள Eastern Zhou என்கின்ற பகுதியில் 771 – 256 BC யில் வேற சில நோக்கத்திற்க்காக மக்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றன. பின்னர் காலப்போக்கில் இவை பல வடிவங்கள் எடுத்து 960 – 1279 காலகட்டத்தில் சைனாவின் Song Dynasty யில் சமையல் முறைக்கு பயன்படுத்த ஆரம்பிக்க பட்டிருக்கிறது. ஆனால் 1368 – 1644 Ming Dynasty யின் இறுதி காலகட்டத்தில் தான் இந்த வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை முறை சைன மக்களிடையே பிரபலம் அடைய தொடங்கி இருக்கிறது. மெல்ல மெல்ல காலப்போக்கில் ஆசிய கண்டத்தையும் தாண்டி மேற்கத்திய நாடுகளிலும் இந்த வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற தொடங்கியுள்ளது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

பன்னீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 5 லிருந்து 10 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 10 லிருந்து 15 நிமிடம் எடுக்கும்.

பன்னீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை முழுமையாக சுமார் 20 நிமிடத்தில் இருந்து 25 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை ஒன்று அல்லது இரண்டு நபர்கள் தாராளமாக சாப்பிடலாம்.

இதை ஒரு நாள் ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம். இருப்பினும் இந்த பன்னீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரையை அன்றே உண்டு விடுவது நல்லது.

இதை ஒற்றிய உணவுகள்:

  • சிக்கன் ஸ்டிர் ஃப்ரை
  • மட்டன் ஸ்டிர் ஃப்ரை
  • ஃபிஷ் ஸ்டிர் ஃப்ரை
  • பீஃப் ஸ்டிர் ஃப்ரை
  • வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை
  • கார்ன் ஃப்ரை

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

பன்னீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை செய்ய நாம் பயன்படுத்தும் பன்னீரில் புரத சத்து, கால்சியம், பொட்டாசியம், மற்றும் கொழுப்பு சத்து நிறைந்திருக்கிறது.

இதில் நாம் பயன்படுத்தும் ப்ரோக்கோலியில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் K மற்றும் C உள்ளது. இவை இதயம் மற்றும் கண்களுக்கு மிகவும் நல்லது.

நாம் இதில் சேர்க்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

நாம் சேர்க்கும் குடை மிளகாயில் விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை இதயம், கண், மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Paneer Vegetable Stir Fry / பன்னீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை